வியாழன், 23 செப்டம்பர், 2010

சு வர்ணலதாவின் வாரலாற்றுத் தடம்....

ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட ஒரு பாடகிக்காக எழுதப்படும் ஒரு வரலாற்றுத் தொகுப்பு இதுவாகும்.
1973 ம் வருடம் இந்தியாவின் கேரளாவில் உள்ள பாலக்காடு எனும் இடத்தில் இவர் செருக்குட்டி மற்றும் கல்யாணி அகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவரது தந்தையார் ஒரு சிறந்த ஆர்மோனிய வாசிப்பாளர் ஆவார். 1987 காலப்பகுதியில் சென்னைக்க குடிபெயர்ந்த இவர் எம்எஸ் விஸ்வநாதனால் அடையாளம் காணப்பட்டு இளையராஜாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். இவர் பாடிய முதல் தமிழ் பாடல் 1987 ம் ஆண்டு நீதிக்குத் தண்டனை என்ற படத்தில் பாடிய பாரதியார் பாடலாகும் (சின்னம் சிறு கிளியே). ஆனால் சிலர் இது 1982 ல் வந்ததாகச் சொல்லிக் கொள்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பல்லாயிரகண்கணக்கான திரைப்படப் பாடல்களை பாடி புகழ் பெற்றவர். பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த கருத்தம்மா படத்தில் இவர் பாடிய பாடலுக்காக (போறாளே பொன்னுத்தாயி) சிறந்த பின்னணி பாடகி என்ற தேசிய விருது வழங்கப்பட்டது.
1990ம் ஆண்டு வெளியான கேப்டன் பிரபாகரன் படத்தில் இவர் பாடிய ஆட்டமா... தேரோட்டமா... பாடல்தான் இவரை பிரபலப்டுத்தியது. அதேபோல அதற்கடுத்து சின்னத்தம்பி படத்தில் இடம்பெற்ற "போவோமா ஊர்கோலம்... பாடல் ஸ்வர்ணலதாவை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. இப்பாடலுக்காக தமிழக அரசின் சிறந்த பின்னணி பாடகிக்கான விருது கிடைத்தது.
இவர் திருமணம் செய்யாமலேயே இறுதிவரை வாழ்ந்து நுரையிரல் கோளாறால் சென்னை மருத்துவ மனையொன்றில் எமைவிட்டுப் பிரிந்துவிட்டார்.

இவர் ரகுமானுக்காக பாடிய சில பாடல்கள்..

எவனோ ஒருவன் (அலைபாயுதே 2000)
சொல்லாயோ சோலைக்கிளி (அல்லி அர்ஜினா 2001)
ஒரு நாள் ஒரு பொழுது (அந்திமந்தரை 1995)
குச்சி குச்சி (பொம்பெய் 1995)
உசிலம் பட்டி (9ஜென்டில்மென் 1993)
அக்கடாண்ணு (இந்தியன் 1996)
மாஜா மச்சின்த (இந்தியன் 1996)
முன்னேறு தான் ( இந்திரா 1995)
அஞ்சாதே ஜீவா (ஜோடி 1999)
அண்ணா உன் தொழில் (ஜோடி 1999)
சொல்லு அன்பே (ஜோடி 1999)
எந்தன் வானில் (காதல் வைரஸ் 2002)
முக்காலா (காதலன் 1994)
காதல் எனும் (காதலர் தினம் 1999)
சின்யோரே (கன்னத்தில் முத்தமிட்டால் 2002)
போறாளே பொன்னுத்தாயி (கருத்தம்மா 1993)
மெட்ராச (மே மாதம் 1994)
மெல் இசையே (மிஸ்டர் ரோமியோ 1996)
உழுந்து விதைக்கயில (முதல்வன் 1999)
சிட்டக்குருவி (பரசுராம் 2003)
மொட்டு விட்டதா (பவித்திரா 1994)
ஹெய் ராமா (ரங்கிலா 1995)
லக்கி லக்கி ( ரட்சகன் 1997)
மேக்கூறி பூக்கள் (ரட்சகன் 1997)
கும்மி அடி ( சில் என்று ஒரு காதல் 2006)
காதல் யோகி (தாளம் 1999)
குளிருது (தாஜ்மகால் 1999)
பூங்காற்றிலே ( உயிரே 1998)
ராக்கோழி ரெண்டு (உழவன் 1993)
யே முத்து பாப்பா (வண்டிச்சோலை சின்ராசு 1994 )

இவர் பாடிய பாடலில் என்னை மிகவும் கவர்ந்தது இதுதான். சத்திரியன் திரைப்படத்தில் பாணுப்பிரியாவிற்காக பாடியிருப்பார். மிகவும் அழகான காட்சியமைப்புக் கொண்ட அந்தப் பாடலை கீழே உள்ள

இது தான் பாடல் வரிகள்..

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் கூடலே ஓ மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓ மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது
(மாலையில்..)

வருவான் காதல் தேவன் என்றும் காற்றும் கூர
வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற
வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்து பாட
ஒரு நாள் வண்ண மாலை சூட
வளர்த்தேன் ஆசை காதலை நெஞ்சமே பாட்டெழுது
அதில் நாயகன் பேரெழுது
(மாலையில்..)

கரைமேல் நானும் காற்று வாங்கி விண்ணை பார்க்க
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து
கண்ணை பார்க்க அடடா நானும்
மீனைப் போல கடலில் பாயத் தோணுமோ
அலைகள் வெள்ளி ஆடை போல
உடலின் மீது ஆடுமோ நெஞ்சமே பாட்டெழுது
அதில் நாயகன் பேரெழுது
(மாலையில்..)

படம்: சத்ரியன்
இசை: இளையராஜா


பாடல் பெயரை சொடுக்குவதன் மூலம் ரசிக்கலாம். அதற்கு முன் வாக்குக்குரியா பொத்தானை சொடுக்கி அதனூடு போய் வாக்கிட்டு விட்டு பாட்டை பாருங்கள்

மாலையில் யாரோ மனதோடு பேச